அகனியில் ரூ.22½ லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலகம்

அகனியில் ரூ.22½ லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டது.;

Update: 2022-12-05 19:00 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகனி ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் வரவேற்றார். விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். விழாவில் தி.மு.க. நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய துணை செயலாளர் சசிகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்வேணி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் வீரமணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்