ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம்
சங்கராபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுமான பணியை ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்;
சங்கராபுரம்
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ரங்கப்பனூர் ஊராட்சியில் உள்ள மல்லாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.25½ லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை, கூடுதல் வட்டார கல்வி அலுவலர் தஸ்பிகா, ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லதுரை, செல்வகணேஷ், தலைமை ஆசிரியர் லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.