ரூ.18 லட்சத்தில் புதிய பாலம்; இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

விக்கிரமசிங்கபுரம் அருகே ரூ.18 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலத்தை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Update: 2023-09-17 18:45 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைவிளை பட்டியலில் கடனாநதி கால்வாயில் அம்பை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18 லட்சம் மதிப்பில் புதிதாக பாலம் கட்டப்பட்டு உள்ளது. இதை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். விக்கிரமசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏ.ஜி.சபை, பரிசுத்த தேமா ஆலயம், பெனியல் சர்ச், தூய யோவான் ஆலயம் உள்ளிட்ட 12 கிறிஸ்தவ சபைகளின் கல்லறை தோட்டத்திற்கு செல்வதற்கு வசதியாக இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் துர்க்கை துரை, துணைச் செயலாளர் பிராங்கிளின், மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவன் பாபு, கவுன்சிலர்கள் இமாகுலேட், மாரிமுத்து, விளையாட்டு ஆலோசகர் மனோகரன் சாமுவேல், அசோக், வக்கீல் ஸ்டாலின், மணிமுத்தாறு நகரச் செயலாளர் ராமையா, முன்னாள் அரசு வக்கீல் கோமதி சங்கர், இளைஞரணி சண்மு, மற்றும் கிறிஸ்த போதகர்கள் ஸ்டாலின் பிரின்ஸ், சுகுமார், மானசா, கிறிஸ்டோபர், தபசின், நிசோலின் எலிசா ராஜா, சாமுவேல் ராஜ்குமார், ராஜன், ஜீவா, ஜான்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்