ரூ.8 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்; ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்தார்

ஏர்வாடியில் ரூ.8 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்தார்.

Update: 2023-03-12 19:17 GMT

வள்ளியூர்:

ஏர்வாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடந்தது. ஏர்வாடி நகர பஞ்சாயத்து தலைவி தஸ்லிமா அயூப்கான் தலைமை தாங்கினார். நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் கண்ணன் முன்னிலை வகித்தார். புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் எரிக்ஜூடு, களக்காடு வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வகருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. எம்பி ஞானதிரவியம் காவல்கிணறு மகேந்திரகிரியில் செயல்பட்டுவரும் இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் அங்கமான இஸ்ரோ விண்வெளி உந்தும வளாக இயக்குனர் ஆசீர் பாக்கியராஜை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார்.

அதில், "காவல்கிணறு பகுதி நெல்லை - கன்னியாகுமரி மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதியாகும். இங்கு ஏராளமான கிராமங்களும், ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து செல்லும் முக்கிய பகுதியாகும். இங்கு சரியான மருத்துவமனை வசதியில்லை. எனவே சூலூர்பேட் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கப்பட்டது போல் காவல்கிணற்றிலும் பொதுமக்கள் பயன்படும் வகையில் இஸ்ரோ சார்பில் ஒரு பல்நோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும். காவல்கிணறு பகுதியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரியில் விண்வெளி அருங்காட்சியகத்தை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்