சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம்: உதயநிதி ஸ்டாலினுக்கு நெல்சன் வாழ்த்து

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இயக்குனர் நெல்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்;

Update:2024-08-31 20:42 IST

சென்னை,

தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரவு நேரத்தில் சாலையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தீவுத்திடல், போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வரை 3.5 கிலோமீட்டர் போட்டிக்குரிய தூரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 19 திருப்பங்கள், அதிவேக நேர் வழிகளுடன் பந்தய பாதை அமைந்துள்ளது. இதையொட்டி சாலையின் இரு புறமும் தடுப்பு சுவருடன், கம்பி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்தின் பயிற்சி போட்டிகள் தற்போது தொடங்கி உள்ளது. பயிற்சி போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இரவு 7 மணிக்கு தொடங்கிய கார் பந்தய பயிற்சி போட்டிகள் இரவு 10.45 மணிக்கு நிறைவடைகிறது. நாளை கார் பந்தய போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இயக்குனர் நெல்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இந்தியாவின் முதல் ஆன் ஸ்ட்ரீட் நைட் பார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடக்கிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள் உதயநிதி ஸ்டாலின் சார். இந்த முயற்சி மிகவும் சிறப்பாக அமையும். என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்