வீட்டை விட்டு ஓடிய நெல்லை சிறுவன் கோவையில் மீட்பு

வீட்டை விட்டு ஓடிய நெல்லை சிறுவன் கோவையில் மீட்பு

Update: 2022-12-13 18:45 GMT

கோவை

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் முத்துவேல் (வயது 16). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு மேற்கொண்டு படிக்காமல் இருந்து வந்தார். இதனை அவரது தந்தை முத்துப்பாண்டி கண்டித்தார்.

இதனால் கோபமடைந்த சிறுவன் தனது பெற்றோரிடம் சொல்லாமல் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ரெயில் மூலமாக கேரள மாநிலம் சென்றான். பின்னர் கோவை வந்த சிறுவன் சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் கோவை க.க.சாவடி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியாக சுற்றித்திரிந்தான். இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று சிறுவனை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிறுவன் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு கோவை வந்தது தெரியவந்தது. பின்னர் இது குறித்து செல்போன் மூலமாக சிறுவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பெற்றோர் வந்ததும் அறிவுரை கூறி பெற்றோருடன் சிறுவனை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்