நெல்லையப்பர் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம்
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான விநாயகர் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கியுள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வருகிறது.
48½ நாள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான விநாயகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெறும்.
விநாயகர் திருவிழாவிற்காக கோவில் உள் பிரகாரத்தில் அமைந்துள்ள சிறிய கொடிமரத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்று வருகிறது.
அதை தொடர்ந்து நெல்லையப்பர் கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் ஓடும் திருவிழா வரும் 11ஆம் தேதி நடைபெற இருக்கிறது.