நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி செய்தவர் கைது

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-04-20 18:45 GMT

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

மோசடி

கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளையை சேர்ந்த நடேசன் என்பவரது மகனுக்கு கடந்த 2018-ம் ஆண்டில் நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இருந்து இளநிலை உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை வந்து உள்ளது. இந்த நிலையில் நடேசனுக்கு பழக்கமான நெல்லை பிருந்தாவன் நகரை சேர்ந்த முத்தையா மகன் பேச்சியப்பன் என்ற கண்ணன் (67) என்பவர், இளநிலை உதவியாளர் பணிக்கு டெபாசிட் பணம் ரூ.3 லட்சம் கட்டினால் தான் வேலை கிடைக்கும் என்று கூறி உள்ளார். இதனை நம்பிய நடேசன், ரூ.3 லட்சத்தை பேச்சியப்பன் என்ற கண்ணனுக்கு தனது உறவினர் வங்கி கணக்கில் இருந்து அனுப்பி உள்ளார். ஆனால் நடேசனின் மகனுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் நடேசன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு உள்ளார். அப்போது ரூ.50 ஆயிரத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதம் உள்ள ரூ.2 ½ லட்சம் பணத்தை தராமல் ஏமாற்றி விட்டாராம்.

கைது

இது குறித்து நடேசன் நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ் குமாரிடம் புகார் அளித்தார். நெல்லை சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் ஆகியோர் மேற்பார்வையில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அனிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் பேச்சியப்பன் என்ற கண்ணனை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்