50 லட்சம் கையொப்பங்களைக் கடந்தது நீட் கையெழுத்து இயக்கம் - அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

நாம் பெறும் இத்தனை லட்சம் கையெழுத்துகளும் நீட் ஒழிப்பு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்று அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.;

Update:2023-12-01 23:50 IST

சென்னை, 

'நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க. இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இதற்காக திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து அவா் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நீட் விலக்கை வலியுறுத்தி, திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவா் அணி சாா்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. 50 லட்சம் கையொப்பங்களைப் பெற இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதிகரித்து இப்போது 55 லட்சம் ஆகியுள்ளது. இணையவழியில் 40 லட்சமும், அஞ்சல் அட்டை வழியாக 15 லட்சமும் என 55 லட்சம் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொடா்ந்து, கையொப்பமிட்டு மக்கள் தங்களது நீட் எதிா்ப்பைப் பதிவு செய்து வருகிறாா்கள். நீட் எதிா்ப்புணா்வு தமிழ்நாட்டில் பேரலையாய் திரண்டிருக்கிறது என்பதற்கான சான்று இதுவாகும்.டிச. 17-ஆம் தேதி சேலம் இளைஞரணி மாநில மாநாட்டுக்குள் மேலும் பல லட்சம் கையொப்பங்கள் குவிகின்ற வகையில் நாம் தொடா்ந்து செயலாற்றுவோம்.குடியரசுத் தலைவரின் ஒற்றைக் கையொப்பத்தைப் பெறுவதற்காக நாம் பெறும் இத்தனை லட்சம் கையொப்பங்களும் நீட் ஒழிப்பு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.தகுதி, தரம் என்று ஏமாற்றி நீட்டைத் திணிப்பவா்கள், அதற்கெதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்