ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 108 பேர் தகுதி
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 108 பேர் நீட் தேர்வில் தகுதிபெற்று உள்ளனர்.
மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17-ந்தேதி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 75 மாணவர்கள், 203 மாணவிகள், அரசு உதவி பெறும் பள்ளிளைச் சேர்ந்த 13 மாணவர்கள், 50 மாணவிகள், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்கள், 13 மாணவிகள் என 357 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் 93 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து 108 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த 24 மாணவர்களும், 51 மாணவிகள்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 4 மாணவர்களும், 20 மாணவிகளும், மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 3 மாணவர்களும், 6 மாணவிகளும் என 108 பேர் தகுதி பெற்றுள்ளனர். அரசு பள்ளி பரமக்குடி மாணவர் சீனிவாசன் 371, மாணவி பிரபாவதி 334, ஆர்.எஸ். மங்கலம் மாணவி அபி செல்வம் 298, ஆர்.காவனூர் மாணவி பவானி 286, வண்ணாங்குண்டு மாணவி திரிஷா 228, ஆர்.காவனூர் மாணவிகள் ஷர்மிளி 230, லத்திகா 213, ஏர்வாடி பள்ளி மாணவர் செந்தாமரை கண்ணன் 192, ஆர்.காவனூர் மாணவி பாரதி 189, சிக்கல் பள்ளி மாணவி காவ்யா 185, எமனேசுவரம் மாணவர் அச்சுதராமன் 176, ஆர்.காவனூர் மாணவி கார்த்திகை செல்வி 173, மாணவர் யுவராஜ் 166, மாணவி சோபிகா 164, உச்சிநத்தம் மாணவி சத்யபாமா 162 மதிப்பெண் எடுத்து மாவட்டத்தில் முதல் 15 இடங்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.