விருத்தாசலம் அருகே வீட்டில் ரூ.2½ லட்சம் நகை-பணம் திருட்டு

விருத்தாசலம் அருகே வீட்டில் ரூ.2½ லட்சம் நகை-பணம் திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-10 16:54 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை ஷேக் நகரை சேர்ந்தவர் சேட்டு மகன் அப்துல் உசேன் (வயது 38). இவர் சவுதி நாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தில்ஷாத் பேகம் (35). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சம்பவத்தன்று தில்ஷாத் பேகம், அருகில் உள்ள தங்கை ஜெகபர் நாச்சியார் வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருடுப்போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்