விளாத்திகுளம் அருகே அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்: மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

விளாத்திகுளம் அருகே அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

Update: 2022-11-03 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே ஆற்றங்கரை கிராமத்தில் 2021-2022- ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த முகாமிற்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாஸ்கர் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன், மகளிர் திட்ட மேலாளர் அருள் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கிராமத்தில் செயல்படும் திட்டங்கள், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசினார். மேலும் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை மக்களின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற கோரிக்கைகளை மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ., அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் தி.மு.க கிளைச் செயலாளர் பிச்சை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், மகேந்திரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரகுராமர், கால்நடை உதவி மருத்துவர் கருப்பசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரசல் ராஜ், கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், மாமன்னர் ராஜராஜ சோழரின் 1037-வது சதய விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் பாரதியார் பஸ்நிலையம் முன்பு வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்