விளாத்திகுளம் அருகேயூனியன் நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள்: மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

விளாத்திகுளம் அருகே யூனியன் நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்;

Update: 2023-10-26 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் யூனியன் முத்துசாமிபுரம் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.28½ லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை தவமணி தலைமை தாங்கினார். புதூர் தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பள்ளியில் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் தி.மு.க. நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்