வல்லநாடு அருகே ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்:2 பேர் கைது
வல்லநாடு அருகே ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீவைகுண்டம்:
வல்லநாடு அருகே கலியாவூரை சேர்ந்த உய்க்காட்டான் மகன் சுப்பிரமணியன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரும், வல்லநாடு செட்டியார் தெருவை சேர்ந்த சப்பாணி மகன் மலையப்பன் (53) வல்லநாட்டை சேர்ந்த லெட்சுமணபெருமாள் ஆகிய மூன்று பேரும் வல்லநாட்டில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் சுப்பிரமணியன் மலையப்பன் ஆகியோர் குடிபோதையில் லெட்சுமணபெருமாளிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியன், மலையப்பன் இருவரையும் கைது செய்து பேரூரணிசிறையில் அடைத்தனர்.