உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் கேட்பாரற்று கிடந்த உண்டியல்
உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் உண்டியல் கேட்பாரற்று கிடந்தது.;
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் நகரில் இருந்து உ.வாடிப்பட்டிக்கு செல்லும் வழியில் உள்ள தோட்ட பகுதியில் ஒரு சிறிய உண்டியல் பல மாதங்களாகவே கேட்பாரற்று கிடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவ்வழியே சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன்போில், உத்தப்ப நாயக்கனூர் போலீசார் உண்டியலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.