தூத்துக்குடி அருகே ஓட்டலுக்கு 'சீல்' வைப்பு
தூத்துக்குடி அருகே ஓட்டலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.;
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி- திருச்செந்தூர் பிரதான சாலையில் முள்ளக்காடு அருகே பிரபல தனியார் ஓட்டல், கட்டிட அனுமதி பெறாமல் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. மாநகராட்சி சார்பில் உரிய கால அவகாசம் வழங்கி 5 முறைகள் அறிவிப்புகள் வழங்கியும், அவற்றை பொருட்படுத்தாமல் உரிய அனுமதி பெறாததால், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ உத்தரவின்பேரில் செயற்பொறியாளர் ரங்கநாதன் உதவி செயற்பொறியாளர் ராமச்சந்திரன், இளநிலை பொறியாளர் நாகராஜன், உதவி பொறியாளர்கள் காந்திமதி, ஆறுமுகம், சுகாதார அலுவலர் ராஜபாண்டி ஆகியோர் அந்த ஓட்டலை நேற்று மூடி 'சீல்' வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.