தூத்துக்குடி அருகேதூய்மை இந்தியா திட்ட செயல்விளக்க முகாம்

தூத்துக்குடி அருகே தூய்மை இந்தியா திட்ட செயல்விளக்க முகாம் நடந்தது.

Update: 2023-05-11 18:45 GMT

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் நிதியுதவியுடன், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம் (அணி எண்கள் 54 மற்றும் 56) சார்பில், தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான செயல்விளக்க முகாம் தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டில் நடந்தது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெ. பூங்கொடி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து தூய்மை இந்தியா திட்டம் குறித்து விளக்கி பேசினார். வணிகவியல் துறைத் தலைவர் ஜெ. முரளிதரன் தூய்மையான இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில், 100 மாணவர்கள் கலந்து கொண்டு தூய்மை இந்தியா திட்டம் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, முள்ளக்காடு பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம், நூலகம் ஆகியவற்றில் தூய்மை பணி மேற்கொண்டு வீடு வீடாகச் சென்று பொதுமக்கள் மத்தியில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையிலும், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. முகாமின்போது மரக்கன்றுகள் நடப்பட்டன. அப்போது, பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தூய்மை இந்தியா திட்டம் குறித்த உறுதிமொழியை ஏற்றனர்.

முகாமுக்கான ஏற்பாடுகளை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன் தலைமையில், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆ. தேவராஜ், பா. பொன்னுதாய், பஞ்சாயத்து தலைவர் கோபிநாத் நிர்மல், காமராஜ் கல்லூரி வரலாற்றுத் துறை பழைய மாணவர் சங்கத் தலைவர் சிவாகர் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்