தூத்துக்குடி அருகே மீனவர் வலையில் சிக்கிய 7 அடி நீள அரியவகை மயில் மீன்
தூத்துக்குடி அருகே மீனவர் வலையில் 7 அடி நீள அரியவகை மயில் மீன் சிக்கியது.
மயில் மீன்
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று கரைக்கு திரும்பி வந்தனர். இதில் அசோகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அரிய வகை மயில் மீன் பிடிபட்டது. இந்த மீனுக்கு மயில் தோகை போன்ற துடுப்பு இருப்பதால், இந்த மீன் மயில்மீன் என்று அழைக்கப்படுகிறது. மயில் மீன் சுமார் 7 அடி நீளமும், 30 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது.
கருவாடு
இதனால் மீனவர்கள் இந்த மீனை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். தொடர்ந்து இந்த மயில் மீன் 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இந்த மீனை கேரளாவில் விரும்பி சாப்பிடுகின்றனர். தமிழகத்தில் மயில் மீனை கருவாடாக மட்டும் பயன்படுத்தி வருகின்றனர் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.