திருச்செந்தூர் அருகே மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

திருச்செந்தூர் அருகே மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.;

Update: 2022-10-10 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் பிலோமி நகர் ஜெபஸ்தியார் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 69). திருச்செந்தூர் சன்னதி தெருவில் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பிலோமி நகர் அருகே அடைக்கலாபுரம் மெயின் ரோட்டில் சென்றபோது குறுக்கே சென்ற மாட்டின் மீது மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிக்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்