திங்களூர் அருகேகடலை போரில் தீ விபத்து

திங்களூர் அருகே கடலை போரில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-07-29 21:47 GMT

பெருந்துறை

திங்களூர் அருகே உள்ள தாண்டாகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் அரசு முத்து. விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த காய்ந்த கடலை கொடி போர் நேற்று தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து அறிந்ததும் பெருந்துறை தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் அந்தக் கடலைக்கொடி போர் பாதியளவு எரிந்து சாம்பலாகி விட்டது. மேலும் தீ விபத்து குறித்து திங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்