தேனி அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது
தேனி அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தேனி அருகே முல்லைநகரில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து 32 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்டிக்கடையை நடத்திய அதே பகுதியை சேர்ந்த மணி மனைவி முனியம்மாளை (வயது 42) கைது செய்தனர்.