தாளவாடி அருகேமாடுமேய்த்து கொண்டு இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

தாளவாடி அருகே மாடுமேய்த்து கொண்டு இருந்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.

Update: 2023-04-29 21:41 GMT

தாளவாடி

தாளவாடி அடுத்த அருள்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சிக்குராஜன். இவருடைய மனைவி பசம்மா (வயது 55). இவர் நேற்று முன்தினம் அங்குள்ள மாதேஸ்வரன் கோவில் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பசம்மாவிடம் நெருங்கி நைசாக பேச்சு கொடுத்தனர். அப்போது அதில் ஒருவன் திடீரென பசம்மாவின் கழுத்தில் இருந்த 1¼ பவுன் தங்க சங்கிலியை வெடுக்கென பறித்தான். பின்னர் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து பசம்மா தாளவாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பசம்மாவிடம் நகை பறித்து சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்