தாளவாடி அருகே மாட்டை கடித்துக்கொன்ற புலி

தாளவாடி அருகே மாட்டை கடித்துக்கொன்ற புலியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.;

Update:2023-08-18 03:33 IST

தாளவாடி

தாளவாடி அருகே மாட்டை புலி கடித்துக்கொன்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

விவசாயி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் ஏராளமாக காணப்படுகின்றன. இதில் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் புலி, சிறுத்தைப்புலி ஆகியவை புகுந்து அங்குள்ள ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகளை கடித்துக்கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட கும்டாபுரம் கிராமத்தில் புகுந்து மாட்டை கடித்து கொன்ற சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

மாட்டை கடித்துக்கொன்ற புலி

தாளவாடி வனச்சரகம் கும்டாபுரத்தை சேர்ந்தவர் பசுவண்ணா (வயது 53). விவசாயி. மேலும் இவர் 5 மாடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று காலை தன்னுடைய மாடுகளை அங்குள்ள மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பின்னர் மாலையில் மாட்டை பிடிக்க சென்றபோது அவருடைய பசு மாடு ஒன்றை காணவில்லை. பின்னர் அந்த பகுதியில் தேடி பார்த்தபோது சிறிது தூரத்தில் அவருடைய மாடு கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை கண்டார்.

பின்னர் அவர் இதுகுறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மாட்டை பார்வையிட்டதுடன், அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தையும் ஆய்வு செய்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி ஒன்று மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை கடித்துக்கொன்றது ெதரியவந்தது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்