சத்தியமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

சத்தியமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனா்.;

Update: 2023-10-09 23:56 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தை அடுத்த புதுக்குய்யனூரில் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருப்பதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிைடத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, புதுக்குய்யனூர் தண்ணீர் தொட்டி அருகே 6 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். உடனே போலீசார் அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் புதுகுய்யனூரை சேர்ந்த ராசு, முகிலன், பவானிசாகரை சேர்ந்த தயாளன், கருப்பன், புதுவடவள்ளியை சேர்ந்த ரவி, வெள்ளியம்பாளையம் புதூரை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.40 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்