சாத்தான்குளம் அருகே வீட்டுக்கு தீவைத்த சகோதரர்கள் கைது

சாத்தான்குளம் அருகே வீட்டுக்கு தீவைத்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-10-20 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகேயுள்ள பெருமாள்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த முத்து மனைவி வள்ளி (வயது 55). இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் நெல்லையில் தங்கி படித்துவருகின்றனர். இதனால் வள்ளி மட்டும் ஊரில் தனியாக வசித்து வருகிறார். இதனிடையே வள்ளி குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த அர்ஜூனன் மனைவி பூச்செண்டு (55) என்பவருக்கும் இடப்பிரச்சினைதொடர்பாக முன்விரோதம் இருந்துவருகிறது.

இந்நிலையில் கடந்த 18-ந்தேதி பூச்செண்டு மற்றும் அவரது மகன்கள் சக்திவேல் (27), சுந்தர்ராஜ் (24) சேர்ந்து வள்ளிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரது வீட்டுக்கு தீவைத்தனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

இது குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்சன் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், சுந்தர்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்