புஞ்சைபுளியம்பட்டி அருகே கண்காணிப்பு கேமரா கடையில் திருட்டு

புஞ்சைபுளியம்பட்டி அருகே கண்காணிப்பு கேமரா கடையில் திருட்டு போனது.;

Update: 2023-07-25 21:49 GMT

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மல்லியம்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார். (வயது 43).

இவர் புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் கண்காணிப்பு கேமரா விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 22-ந் தேதி இரவு ெஜயக்குமாரின் கடையில் வேலைப்பார்க்கும் வாலிபர், ஷட்டரை திறந்துவைத்துவிட்டு தூங்கியதாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கடையில் இருந்த சில உபகரணங்களை காணவில்லை. இதனால் ெஜயக்குமார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தார் . அப்போது 22-ந் தேதி நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் திறந்திருந்த கடைக்குள் நுழைந்து உபகரணங்களை திருடி செல்வது தெரிந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்