புதுப்பேட்டை அருகே மாணவியை கடத்திய தொழிலாளி கைது

புதுப்பேட்டை அருகே மாணவியை கடத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.;

Update: 2022-10-27 18:45 GMT

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே தொரப்பாடி பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் மணிகண்டன் (வயது 26). கட்டிட தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் மணிகண்டன் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்