பொள்ளாச்சி அருகே தொழிலாளிைய மதுபாட்டிலால் குத்திய மகன்
பொள்ளாச்சி அருகே தொழிலாளிைய மதுபாட்டிலால் குத்திய மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த குஞ்சிபாளையம் மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 49). கூலித்தொழிலாளி. இவரது மகன் முருகானந்தம்(22). இந்த நிலையில் சம்பவதன்று மது அருந்திவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்த முருகானந்தம், தனது தந்தை மாரிமுத்துவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர், மதுபாட்டிலை உடைத்து தந்தை என்றுகூட பாராமல் மாரிமுத்துவை குத்தினார். இதில் மாரிமுத்துவுக்கு கை, கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.