கம்பம் அருகேதென்னந்தோப்பில் புகுந்து குரங்குகள் அட்டகாசம்

கம்பம் அருகே தென்னந்தோப்பில் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்தது.

Update: 2023-03-19 18:45 GMT

நாராயணத் தேவன்பட்டி, சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகள் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. இங்கு உள்ள வனப்பகுதியில் யானை, மான், கேளையாடு, காட்டுப்பன்றி, குரங்குகள் ஆகிய வனவிலங்குகள் அதிகமாக உள்ளன. இந்த வன விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதை தவிர்க்க வனத்துறை சார்பில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டது. மேலும் அகழிகள் வெட்டியும் விலங்குகள் விளைநிலங்களுக்குள் வராமல் தடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் அவ்வப்போது குரங்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதில் சுருளிப்பட்டி நல்லதங்காள் கோவில் பகுதியில் இரவு நேரத்தில் குரங்குகள் தென்னத்தோப்புக்குள் புகுந்து தென்னை குரும்பைகளை பறித்து நாசப்படுத்துகின்றன. குரங்குகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். எனவே விளைநிலங்களுக்குள் குரங்குகள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்