பெருந்துறை அருகே ரோட்டில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி

ரோட்டில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை கழிவுநீர்

Update: 2022-07-02 16:23 GMT

பெருந்துறை- ஈரோடு ரோட்டில் உள்ள பகுதி செட்டிதோப்பு. இந்த பகுதி மிகவும் தாழ்வான பகுதி ஆகும். இங்கு மழை பெய்தால், மழைநீர் முழுவதும் செட்டிதோப்பு பகுதியில் உள்ள பெருந்துறை- ஈரோடு ரோட்டில் குட்டை போல் தேங்கி விடும்.

இந்த நிைலயில் நேற்று அந்த பகுதியில் உள்ள பெருந்துறை- ஈரோடு ரோட்டில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், ரோட்டில் குளம் போல் மழைநீர் தேங்கி நின்றது. இதைத்தொடர்ந்து கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மின் மோட்டார் மூலம் தேங்கி நின்ற மழைநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ரோட்டில் தண்ணீர் தேங்காமல் வறண்டு காணப்பட்டது.

இந்தநிலையில், அந்த பகுதியில் நேற்று காலை அளவுக்கு அதிகமாக வந்த சாக்கடை கழிவுநீர், வெளியேற வழியில்லாமல் ஈரோடு செல்லும் ரோட்டில் குட்டைபோல் தேங்கி நின்றது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

இதனிடையே கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ரோட்டில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்றும் பணியும் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்