பெரியகுளம் அருகேதனியார் நிலத்தில் இறந்து கிடந்த காட்டெருமை

பெரியகுளம் அருகே தனியார் நிலத்தில் காட்டெருமை இறந்து கிடந்தது.;

Update: 2023-08-22 18:45 GMT

பெரியகுளம் அருகே எண்டப்புளி கிராமத்தையொட்டி மலைப்பகுதி உள்ளது. இங்கு தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இதன் காரணமாக வனவிலங்குகள் தண்ணீர் தேடி அருகே உள்ள விளைநிலங்களுக்குள் வந்து விடுகின்றன. இந்நிலையில் எண்டப்புளி பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் தண்ணீர் தேடி வந்த காட்டெருமை ஒன்று நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிா்ச்சி அடைந்த நிலத்தின் உரிமையாளர் தேவதானப்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் இறந்து கிடந்த காட்டெருமையின் உடலை பார்வையிட்டனர். அப்போது கால்நடை மருத்துவர்கள் மூலம் காட்டெருமையின் உடலை பரிசோதனை செய்து அது எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே வனவிலங்குகள் தண்ணீர் தேடி வரும்போது விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் வனப்பகுதியில் தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்