நாசரேத் அருகே புதிய ரேஷன் கடை திறப்பு விழா
நாசரேத் அருகே புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.;
நாசரேத்:
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் கட்டாரிமங்கலம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை திறப்புவிழா நடைபெற்றது. விழாவிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் வில்லியம் பெலிக்ஸ் தலைமை தாங்கினார். ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பயனாளிகள், ஊர் பொதுமக்கள், வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.