நாலாட்டின்புத்தூர் அருகே டிப்பர் லாரியில் சரள்மண் கடத்திய டிரைவர் கைது
நாலாட்டின்புத்தூர் அருகே டிப்பர் லாரியில் சரள்மண் கடத்திய டிரைவர் போலீசார் கைதுசெய்தனர்.;
நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூர் அருகே டிப்பர் லாரியில் சரள் மண் கடத்தி சென்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் சோதனை
செட்டிகுறிச்சி பகுதியில் இருந்து கோவில்பட்டியை நோக்கி டிப்பர் லாரியில் சரள் மண் கடத்தி செல்வதாக நாலாட்டின் புத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாலாட்டின்புத்தூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் தலைமையிலான போலீசார் செட்டிகுறிச்சி- கட்டாலங்குளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள கோபாலபுரம் காட்டு பகுதி அருகே வேகமாக வந்த டிப்பர் லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
டிரைவர் கைது
அப்போது உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் அனுமதியின்றி லாரியில் சரள் மண் கடத்தி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சரள் மணலுடன் அந்த லாரியை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரள் மணலை கடத்தி சென்ற லாரி டிரைவரான கயத்தாறு அருகே உள்ள பனீக்கர்குளத்தை சேர்ந்த முருகன் மகன் சுரேஷ் (வயது 26) என்பவரை கைது செய்தனர். இந்த சரள்மணலை டிரைவர் எங்கு கடத்தி சென்றார்? இந்த கடத்தில் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.