முத்தையாபுரம் அருகேமோட்டார் சைக்கிள் திருட்டு
முத்தையாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.;
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் எழில் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் மணி (வயது63). இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டுக்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மாலையில் மர்ம நபர் அதை திருடி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.