மொடக்குறிச்சி அருகேகஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
மொடக்குறிச்சி அருகே கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.;
ஈரோடு மதுவிலக்கு பிரிவு போலீசார் மொடக்குறிச்சி அருகே உள்ள பரிசல் துறை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கொக்கராயன்பேட்டை பாரதிநகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 28), கோகுல் (22), முகமது தஸ்தாகீர் (22) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் நின்று கொண்டு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்யப்பட்டன.