குலசேகரன்பட்டினம் அருகேதோட்டத்தில் தீ விபத்து
குலசேகரன்பட்டினம் அருகே தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.;
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம்- உடன்குடி செல்லும் சாலையிலுள்ள தனியார் தோட்டத்தில் நேற்று திடீரென தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். திருச்செந்தூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தோட்டத்து வேலி பகுதியில் பரவிய தீயை அணைத்தனர். இதனால் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.