கோவில்பட்டி அருகே விவசாயி நிலத்தில் ஆண் பிணம்
கோவில்பட்டி அருகே விவசாயி நிலத்தில் ஆண் பிணமாக கிடந்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ளது முடுக்கலாங்குளம் விவசாயி கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவரது உடலில் ஜட்டி மட்டுமே இருந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் கொப்பம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, துரைசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு அந்த ஆண்பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? இறந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.