கூத்தாநல்லூர் அருகே, சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கூத்தாநல்லூர் அருகே சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.;

Update: 2023-10-01 18:45 GMT

கூத்தாநல்லூர்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கூத்தாநல்லூர் அருகே சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.

கோரையாறு சாலை

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வாழச்சேரியில் இருந்து, கோரையாறு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பள்ளி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும், அதங்குடி, வெள்ளக்குடி, விழல்கோட்டகம், சித்தாம்பூர், வாழச்சேரி, கிளியனூர், அத்திக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த சாலையில் சென்று வருகின்றனர். அருகாமையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த சாலை வழியாகவே செல்கின்றனர்.

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

இந்த நிலையில் இந்த சாலையோரத்தில், இரண்டு பக்கமும் அமைக்கப்பட்ட இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில், சாலையில் விழுந்து விபரீதம் ஏதேனும் ஏற்படும் நிலையில் இருந்தது. இதனால், அந்த சாலையில் சென்று வரக்கூடிய மக்கள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வந்தனர்்.

குறிப்பாக, இரவு நேரங்களில் எதிர்பாராதவிதமாக மின்கம்பம் சாய்ந்து கீழே விழுந்து, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுமோ என்றும், மழை காலங்களில் பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் சாய்ந்து விடுமோ என்றும் அப்பகுதி மக்கள் கவலை அடைந்தனர்.

'தினத்தந்தி' எதிரொலி

இதனால், விபரீதம் ஏதேனும் ஏற்படும் முன் சாய்ந்த நிலையில் உள்ள இரண்டு மின் கம்பங்களையும் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியானது. அதன் எதிரொலியாக உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாய்ந்த நிலையில் இருந்த இரண்டு மின்கம்பங்களும் சீரமைக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்