கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம் தேவகி அம்மாபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). அவருடைய மனைவி முருகேஸ்வரி (29). இவர்கள் 2 பேரும் பழைய இரும்பு சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் வீட்டில் மனைவி, மகன், மகளுடன் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட வெங்கடேசன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்கு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு வெங்கடேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.