கழுகுமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி சாவு

கழுகுமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்து போனார்.

Update: 2023-10-15 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

தொழிலாளி

கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் சி.ஆர்.காலனி பகுதியை சேர்ந்த கலப்பையா மகன் விஜயன் (வயது 40). பென்சிங் தொழிலாளி. இவர் நேற்று காலை சுமார் 8 மணியளவில் கழுகுமலையில் இருந்து கரடிகுளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சி.ஆர். காலனி அருகே சென்றபோது, கரடிகுளம் சாலையில் வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து விஜயன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

மருத்துவமனையில் சாவு

ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

டிரைவரிடம் விசாரணை

மேலும் இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த கரடிகுளம் மேல தெருவை சேர்ந்த ராமசாமி மகன் ஜெய்சங்கர் (43) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான விஜயனுக்கு ஷீபா (35) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்