கடம்பூர் அருகே குழியில் விழுந்த டிராக்டர்

டிராக்டர்

Update: 2022-11-01 20:01 GMT

கடம்பூர் மலைக்கிராமம் அருகே உள்ள பவளகுட்டையை சேர்ந்தவர் வேலு (வயது 39). விவசாயி. இவர் தன்னுடைய டிராக்டரில் நேற்று மாலை பவளகுட்டையில் இருந்து அந்தியூர் நோக்கி சென்றுகொண்டு இருந்தார். அப்போது நிலை தடுமாறிய டிராக்டர் கிணறுபோல் இருந்த சாலையோர குழியில் திடீரென விழுந்துவிட்டது. குழியை நோக்கி இறங்கியபோதே வேலு சுதாரித்துக்கொண்டு வெளியே குதித்து உயிர் தப்பினார். இந்தநிலையில் குழியில் இருந்த தண்ணீரை அகற்றிவிட்டு டிராக்டரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்