கடம்பூர் அருகே சேற்றில் சிக்கிய அரசு பஸ்

அரசு பஸ்;

Update: 2023-03-27 20:53 GMT

சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக மாக்கம்பாளையத்துக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கடம்பூரை அடுத்த சர்க்கரை பள்ளம் என்ற இடத்தில் உள்ள ஓடை வழியாக சென்றபோது அங்கு ஓடிய தண்ணீரின் சேற்றில் பஸ்சின் சக்கரம் சிக்கி கொண்டது. டிரைவர் எவ்வளவோ இயக்கியும் பஸ் அங்கிருந்த நகராமல் சேற்றில் புதைய தொடங்கியது. இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் பஸ்சின் சக்கரத்துக்கு அடியில் கற்கனை அடுக்கி வைத்தனர். இதனால் சேற்றில் இருந்து பஸ் மீண்டு வெளியேறி வந்தது. இதையடுத்து பயணிகள் அனைவரும் பஸ்சில் தங்களுடைய கிராமங்களுக்கு சென்றனர். சேற்றில் பஸ்சின் சக்கரம் சிக்கியதால் 1 மணி நேரம் தாமதமாக தங்களுடைய கிராமத்துக்கு பயணிகள் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்