கடம்பூர் அருகே கஞ்சா பயிர் செய்தவர் கைது

கஞ்சா

Update: 2022-11-30 20:40 GMT

கடம்பூர் அருகே உள்ள குத்தியாலத்தூர் பவளக்குட்டை பகுதியில் வசிப்பவர் பழனிசாமி (வயது 33). இவர் வீட்டின் அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

இந்தநிலையில் மக்காச்சோள பயிருக்கு இடையே பழனிச்சாமி கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று பழனிச்சாமியின் தோட்டத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது, மக்காச்சோள செடிகளுக்கு இடையே கஞ்சா பயிர் செய்து இருந்தது தெரிந்தது. இதையடுத்து 40 கஞ்சா செடிகளையும் போலீசார் பறிமுதல் செய்து பழனிச்சாமியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்