கடம்பூர் அருகே சாலையோரம் லாரி கவிழ்ந்து விபத்து

கடம்பூர் அருகே சாலையோரம் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;

Update: 2023-07-28 21:43 GMT

டி.என்.பாளையம்

கடம்பூர் அருகே உள்ள பவளக்குட்டை பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சத்தியமங்கலத்துக்கு நேற்று புறப்பட்டது. லாரியை சத்தியமங்கலம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 30) என்பவர் ஓட்டினார். கடம்பூரை அடுத்த போன் பாறை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் ரமேஷ் காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்