எட்டயபுரம் அருகேவேன் கவிழ்ந்து ஒருவர் பலி

எட்டயபுரம் அருகே வேன் கவிழ்ந்து ஒருவர் பலியானார்.

Update: 2023-01-30 18:45 GMT

எட்டயபுரம்:

மதுரையில் இருந்து ஒரு வேனில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 20 தொழிலாளர்கள் குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்தனர். நேற்று இரவு 7 மணியளவில் முத்தலாபுரம் விலக்கு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் திடீரென்று சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 20 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் லாலு என்பவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்தவரின் உடலையும் போலீசார் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்