திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு

திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பரிதாமாக இறந்தார்.

Update: 2022-09-23 19:52 GMT

திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று உடல் சிதைந்த நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர் திருச்சி அகிலாபேட்டையை சேர்ந்த தனபால் (வயது 49) என்பதும், தாமரைப்பாடி பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

எனவே தண்டவாளத்தை கடக்கும் போது அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு அவர் இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்