தேவதானப்பட்டி அருகேமோட்டார்சைக்கிள் மோதி விவசாயி பலி
தேவதானப்பட்டி அருேக மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.
தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 60). விவசாயி. நேற்று முன்தினம் இவர், தேவதானப்பட்டி பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் இருந்து மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். தேவதானப்பட்டி பைபாஸ் சாலையில் புல்லக்காபட்டி பிரிவு அருகே வந்தபோது அவர் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கி சேலத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள், இவரது ெமாபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.