சின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வர பகவான்-நீலாதேவி திருக்கல்யாணம்
சின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வர பகவான்-நீலாதேவி திருக்கல்யாணம் நடந்தது
சின்னமனூர் அருகே சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத பிரமோற்சவத்தையொட்டி 3-வது வெள்ளிக்கிழமை சனீஸ்வர பகவான்-நீலாதேவி திருக்கல்யாணம் நடைபெறும். அதன்படி இன்று கோவிலில் சனீஸ்வர பகவான்-நீலாதேவிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் நீலாதேவிக்கு உருவம் கிடையாது என்பதால் கும்பத்தில் நீலாதேவி உருவம் அமைத்து அதற்கு சனீஸ்வர பகவான் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செயதனர். இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல். குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.