சேத்தியாத்தோப்பு அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

சேத்தியாத்தோப்பு அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-10-01 18:45 GMT

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சோழத்தரத்தை சேர்ந்தவர் அன்புமணி (வயது 59). இவரது மனைவி செல்வி (58). விருதுநகர் மாவட்டம் நரிக்குடி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த அன்புமணி, கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும், நோய் குணமாகவில்லை.

கடந்த ஜூலை மாதம் முதல் மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அன்புமணி கீழ்பாதியில் உள்ள தனது விளை நிலத்திற்கு சென்று, விஷத்தை குடித்து விட்டார். பின்னா் அவா் இதுபற்றி தனது மனைவி செல்விக்கு செல்போனில் தகவல் தொிவித்தாா்.

தற்கொலை

இதை கேட்டு அதிா்ச்சி அடைந்த அவா், பதறியடித்துக் கொண்டு சென்று அன்புமணியை மீட்டு சிகிச்சைக்காக சோழத்தரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அன்புமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்