போடி அருகே பெண்ணை தாக்கியவர் கைது

போடி அருகே பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-12 18:45 GMT

போடி அருகே உள்ள அகமலை அண்ணாநகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 49). இவர், வீடு புகுந்து ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதுடன், அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அந்த பெண் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் குரங்கணி போலீசார் வழக்குப்பதிந்து அண்ணாதுரையை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்